Monday, September 17, 2007

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்
தவித்து வரும் 200 தொழிலாளர்கள்!
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007



ஷார்ஜா:

ஷார்ஜாவில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமில், கடந்த 20 நாட்களாக கடும் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஷார்ஜாவின் தேசிய பெயின்ட்ஸ் ரவுன்ட் அருகே இந்த முகாம் உள்ளது. இங்கு இரு பெரும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அனைவரும் செக்யூரிட்டிக்களாக பணியாற்றுபவர்கள்) தங்கியுள்ளனர்.

முன்னணி செக்யூரிட்டி நிறுவனமான பென்ட்லி செக்யூரிட்டி மற்றும் சேப்ட்டி சர்வீஸஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100 தொழிலாளர்கள் இவர்களில் அடக்கம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லையாம். இதனால் தொழிலாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளர் கூறுகையில், ரமலான் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் சப்ளை இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். புனித மாதமான இந்த நாளில், தங்களது கடமைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் தவித்து வருகிறோம்.

பென்ட்லி நிறுவனம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் கட்டணத்தை செலுத்தாததால், தண்ணீர் விநியோகத்தை நகராட்சி துண்டித்து விட்டது. தற்போது தண்ணீர் சப்ளையை சீராக்கக் கோரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பல தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் உள்ளனராம். குளிக்காமல் கொள்ளாமல் எப்படி வேலைக்குப் போக முடியும். அதனால்தான் போகவில்லை. மேலும் எங்களில் சிலர் வேலைய விட்டே போய் விடலாமா என்று சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்று ஒரு தொழிலாளர் கூறினார்.

ஆனால் முகாமில் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை என்று பென்ட்லி நிறுவனம் மறுத்துள்ளது. முகாமில் ஒரு பிரச்சினையும் இல்லை, தொழிலாளர்கள்தான் பெரிதுபடுத்திக் கூறுகிறார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!

அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!
திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007



அபுதாபி:

சட்டவிரோதமாக குடியேறிய நூற்றுக்கணக்கான இந்தியர்கள், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்காக, அவுட் பாஸ் கோரி இந்திய தூதரகத்தில் காத்துள்ளனர். ஆனால் தூதரக செயல்பாடுகள் குழப்பமாக இருப்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சட்டவிரோதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்து வருபவர்களுக்காக எமிரேட்ஸ் அரசு பொது மன்னிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பலர் தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஏராளமான இந்தியர்களும் இத்திட்டத்தின் கீழ் நாடு திரும்பிக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வழங்கப்படும். இதைக் காட்டி அவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பலாம். இந்த நிலையில் அபுதாபியில் உள்ள கேரள சமூக மையத்தில் 30க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால் தூதரகத்திற்குச் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று தூதரகம் மூடியிருந்ததே இதற்குக் காரணம்.

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவே கேரள சமூக மையத்தில் அவுட் பாஸ்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வழங்கும் பொறுப்பை பிரித்துக் கொடுத்துள்ளது இந்தியத் தூதரகம் என்று அந்த அமைப்பின் தற்காலிகத் தலைவரான கபீர் பப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து பப்பு கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் நாங்கள் அவுட் பாஸ் கொடுத்து வருகிறோம். இதுவரை 600 பேருக்கு கொடுத்துள்ளோம்.

அவுட் பாஸ் பெறுவற்காக யாரும் தூதரகத்தை அணுக வேண்டியதில்லை. மாறாக, நேராக எங்களிடம் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளளாம் என அறிவித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மையம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றார் அவர்.

இதற்கிடையே, சிலருக்கு தவறான அவுட் பாஸ்களையும் கொடுத்து விடுகிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஆதிபள்ளி ரமேஷ் என்பவருக்கு, வேறு ஒருவரின் அவுட் பாஸ் கொடுக்கப்பட்டது. இதனால் அவரை விமான நிலையத்திலிருந்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். தற்போது புதிய அவுட் பாஸுக்காக அவர் காத்துள்ளார்.

சுப்ரமணியம் என்பவர் அவுட் பாஸ் பெறுவதற்காக தூதரகத்திற்கும், குடியேற்றப் பிரிவு அலுவலகத்திற்கும் கடந்த 20 நாட்ளாக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறாராம். இன்னும் அவருக்கு அவுட் பாஸ் கிடைத்தபாடில்லை.

அவுட் பாஸ் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள இந்தியத் தூதரகம் 02-4494982 என்ற தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளது. ஆனால் அதற்கு போன் செய்தால் யாருமே போனை எடுப்பதில்லையாம்.

இதனால் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது அலி சபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமீரகத்தில் ஆந்திர மாநில தொழிலாளர்களின் நிலையினை ஆய்வு செய்ய ஆந்திர மாநில முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரி ரவிசங்கர், அரசுத் துறை செயலர் ரமணா ரெட்டி, ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் அசோக் உள்ளிட்டோர் கடந்த வாரம் துபாய்க்கு நேரில் வருகை புரிந்து அவர்களது நிலைமையினை ஆய்வு செய்தனர்.

பின்னர் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆந்திர மாநில தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை அமைச்சர் சபீர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கட்டுமானத் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருப்போர் தாயகம் திரும்பி புதுவாழ்வைத் துவங்க வேண்டும்.

தற்போது 25,000 மேற்பட்டோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளது. ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மற்றும் கரீம் நகர் பகுதிகளில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்பட்டு தாயகம் திரும்புவோருக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கடன் வசதியும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுவரை 80,000 பேர் அமீரகத்தில் பொது மன்னிப்பின் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இதேபோல் தமிழக தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய தமிழக அரசு குழு அனுப்ப முன் வருமா என்ற எதிர்பார்ப்பு அமீரகத்தில் அல்லலுற்று வரும் தமிழகத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Saturday, September 15, 2007

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007


அபுதாபி:

சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்தால் அவர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளையும் அது வகுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இணைச் செயலாளர் ஓபைத் ரஷீத் அல் சஹாமி கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்து வேலையில் சேருபவர்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள். அவர்கள் எமிரேட்ஸுக்கு மறுபடியும் வரவே முடியாது.

மேலும், இவர்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும். அவர்களை வேலையில் சேர்த்து விடுவோருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.

இன்னும் சில வாரங்களில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றார் சஹாமி.

Friday, September 14, 2007

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



சென்னை:

சென்னை அருகே வேலம்மாள் சர்வதேசப் பள்ளியில் பிளஸ்-1 மாணவன் படித்து வந்த மர்மமான முறையில் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகேயுள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது ஒரே மகன் முகமது பிலால் (19). பொன்னேரி அருகில் உள்ள வேலம்மாள் இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 7.30 மணிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், மண்ணடியில் உள்ள சாகுலின் தாத்தா அசேனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிலால் அவனது அறையில் மயங்கிக் கிடந்தான். அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே இறந்து விட்டான் என்று கூறினர்.

இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த அசேன், உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிலாலின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி பிலாலின் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் புரிந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

சாகுல் ஹமீதின் குடும்ப நண்பரான காங்கிரஸ் எம்.பி. ஆருண் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிலாலின் பெற்றோர் சவுதியில் இருந்து வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதுவரை உடல் அப்போலோ மருத்துவமனையில் வைத்திருக்க போலீசார் அனுமதித்தனர்.

செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது

செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது

ஆகஸ்ட் 31, 2007

ரியாத்: செளதி அரேபியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந் நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி திருமணம் ஆகவுள்ள மணமகனும், மணமகளுக்கு எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகிறது.

வரும் 2008ம் ஆண்டு முதல் இந்த எய்ட்ஸ் பரிசோதனை கட்டாய சட்டம் நடைமுறைக்கு வரும் என செளதி சுகாதார அமைச்சர் அல்-வாடன் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் கணவனிடமிருந்து விவகாரத்து:

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த பெண், தனது கணவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளதை சுட்டிக் காட்டி விவாகரத்து பெற்றுள்ளார்.

புஜாரியாவில் உள்ள ஷரியா நீதிமன்றம் அவருக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து பெண்ணை அவர் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா: மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

ஷார்ஜா: மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

ஆகஸ்ட் 31, 2007

ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் 3வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஷார்ஜாவின் அபு சகாரா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஹைதாரபாத்தைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரஷீத் முகம்மது கெளஸ் (41). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள பர்காஸ் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

கெளஸ், ஷார்ஜாவில் உள்ள ஒரு ஆட்டோ உதிரி பாக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாதம் 5000 தினார் சம்பளம் தருவதாக பேசப்பட்டிருந்தது. ஆனால் அதை விட குறைந்த அளவு சம்பளமே கெளஸுக்குத் தரப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கெளஸின் உறவினர் கூறியுள்ளார்.

ஆனால் இதை கெளஸ் வேலை பார்த்து வந்த சமீரா ஆட்டோ உதிரி பாக நிறுவனம் மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 54 பேரும், 2003ல் 64 பேரும், 2005ல் 82 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டும் 100 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது சம்பளப் பிரச்சினை, நிதி நெருக்கடி மற்றும் தனிப்பட்ட குடும்பக் காரணங்கள்தான்.

இந்தியர்களின் தொடர் தற்கொலைகளைத் தொடர்ந்த இந்தியத் தூதரகம், நெருக்கடி தடுப்பு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மனக் குழப்பம், விரக்தி, தற்கொலை மனோபாவம் உள்ளவர்களுக்கு இவர்கள் கவுன்சிலிங் மூலம் உதவுகிறார்கள்.

கடந்த ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் படி ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழ்க்கிழமை வரை தினசரி காலை 11 மணி முதல் 6 மணி வரை கவுன்சிலிங் மையம் இயங்குகிறது. இந்த மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 050-9433111. வாரம் முழுவதும் இது இயங்குகிறது.

இந்த கவுன்சிலிங் மையத்தை அணுகி உதவி பெறுமாறு இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 01, 2007

-முதுவை ஹிதாயத்

துபாய்: துபாயில் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் எம்.ஜே.எம். அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது. முதல்வர் டாக்டர் எம்.ஷேக் முஹம்மது, முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.இ. ஜாபர் சித்திக்கை 050 5489609 எனும் தொலைபேசியிலோ அல்லது hejaf@yahoo.com எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

கணவர் மரணம்: மகள் பாஸ்போர்ட்டில்

கணவர் மரணம்: மகள் பாஸ்போர்ட்டில்
குழப்பம் - துபாயில் தவிக்கும் இந்தியப் பெண்!

செப்டம்பர் 02, 2007

துபாய்: விசா காலம் முடிவடைந்ததால் தனது 6 வயது மகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த அலியா பேகம் என்ற 35 வயதுப் பெண்மணி.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அலியா பேகம். இவர் கடந்த 1999ம் ஆண்டு முகம்மது சாதிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தன்னை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு அலியாவை திருமணம் செய்துள்ளார் சாதிக்.

பின்னர் வேலைக்காரப் பெண் என்று விசா வாங்கி அலியாவை எமிரேட்ஸுக்கு அழைத்து வந்துள்ளார். இங்கு வந்த பின்னர்தான் சாதிக் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்று அலியாவுக்குத் தெரிய வந்தது.

மேலும் சாதிக்குக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி விட்டதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அலியாவுக்கு பின்னர் தெரிய வந்தது. இருப்பினும் அலியாவுடன் எமிரேட்ஸிலேயே குடும்பம் நடத்தி வந்தார் சாதிக். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அவருக்கு 6 வயதாகிறது, பெயர் ஷாமா சாதிக்.

டிரைவராக வேலை பார்த்து வந்த சாதிக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அலியாவின் நிலை கேள்விக்குறியானது. இந்த நிலையில் அவரது விசாக் காலம் முடிவடைந்தது. அதேசமயம், சாதிக் மூலம் பிறந்த மகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்ததால் அலியாவால் தாயகம் திரும்ப முடியவில்லை.

விசா காலம் முடிவடைந்ததால் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் அலியாவுக்கு. ஆனால் அவரது மகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளதால் அவரை இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல முடியாத இக்கட்டான நிலை மறுபக்கம்.

இந்த நிலையில் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் அலியா நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளார் அலியா. தனது நிலை குறித்து அலியா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே நான் மிகுந்த சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். கிடைத்த வேலையைச் செய்து கொண்டு என்னையும், எனது மகளையும் காப்பாற்றி வருகிறேன்.

எனது மகளுக்கு முறையான விசா இல்லாத காரணத்தால் எந்த பள்ளியும் அவளை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. மேலும், பள்ளியில் சேர்த்தாலும் கூட அவளுக்குரிய கட்டணத்தை என்னால் கட்டவும் முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்தியா திரும்ப விண்ணப்பித்துள்ளேன். அங்கு போனதும், எனது மகளுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கப் போகிறேன் என்றார்.

இதற்கிடையே, அலியாவுடன் அவரது மகளும் இந்தியா செல்வதற்கு வசதியாக, அவருக்கு விசா வழங்க இந்திய தூதரகம் முன்வந்துள்ளது.

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007


அஜ்மான்

அஜ்மான் இந்தியர் சங்கம் மற்றும் இப்னு சினா - ஆலியா மருத்துவ குழுமம் மற்றும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்து வழங்கும்
சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

அஜ்மான் இந்தியர் சங்கத்தில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சி விவரம்

பகுதி-1 :
பெயர் பதிவு செய்தல்
வரவேற்புரை: டாக்டர். அப்துல் கபார்
துவக்கி வைப்பவர்: டாக்டர். கீதா அசோக் ராஜ்
தலைமையுரை: திரு. அப்துல் ஹாதி, தலைவர், முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

பகுதி-2 :
"குழந்தை நலம்": டாக்டர். ஜேக்கப்,
"இருதயம் மற்றும் இரத்த அழுத்த நோய்கள்": டாக்டர்.அபுபக்கர்,
"மகப்பேறு கால பாதுகாப்பு முறைகள்" : டாக்டர். நிர்மலா.


பகுதி-3:
"பயணிகள் கவனித்திற்கு..": டாக்டர். ஷர்மா,
"மனித வாழ்வின் மகத்துவம்" : திரு.ஜலாலுதீன் (இயக்குநர்-உணர்வாய் உன்னை!), கேள்வி-பதில் நேரம்.
நன்றியுரை: திரு. மு.ஆ. முஹம்மது இஸ்மாயில்,

மேலும் விவரங்களுக்கு : 050-8631397, 050-5300187, 050-3958626 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நாக்பூரிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை

நாக்பூரிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007


துபாய்:

நாக்பூரிலிருந்து துபாய்க்கு செப்டம்பர் 24ம் தேதி முதல் புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்குகிறது.

முதல் விமானம் நாக்பூரிலிருந்து 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குக் கிளம்பும். துபாய்க்கு மாலை 6.25 மணிக்கு வந்து சேரும். செப்டம்பர் 26ம் தேதி முதல் முறைப்படியான விமான சேவை தொடங்கும். வாரம் மூன்று முறை இந்த விமான சேவை இயக்கப்படும்.

புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாக்பூரிலிருந்து துபாய்க்கு விமான சேவை நடக்கும். துபாயிலிருந்து துபாய் நேரப்படி மாலை 3.50 மணிக்கு கிளம்பி இரவு 8.35 மணிக்கு நாக்பூரை வந்தடையும்.

மறு மார்க்கத்தில் நாக்பூரிலிரந்து பிற்பகல் 12.30 மணிக்குக் கிளம்பி துபாயை அந்நாட்டு நேரப்படி மாலை 3 மணிக்கு விமானம் சென்றடையும்.

துபாய் - நாக்பூர் சேவைக்கான அறிமுகக் கட்டணமாக 169 தினார் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிகள் தனி.

துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவின் 10 நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்திற்கு 50 விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

துபாய் அரசுக்கு இந்திய தொழிலதிபர்

துபாய் அரசுக்கு இந்திய தொழிலதிபர்
5 லட்சம் திர்ஹாம்கள் நன்கொடை
சனிக்கிழமை, செப்டம்பர் 7, 2007



துபாய்:

துபாய் சுகாதாரத் துறைக்கு இந்தியத் தொழிலதிபர் ஒருவர் 5 லட்சம் திர்ஹாம்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

துபாயில் உள்ள பிரபல நகைக் கடை ப்யூர் கோல்ட் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் பிரோஸ் மெர்ச்சன்ட். இவர் துபாய் அரசின் சுகாதாரத் துறையின் பல்வேறு மருத்துவத் திட்டங்களுக்கு நிதியுதவியாக, 5 லட்சம் திர்ஹாம் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கான காசோலையை அவர் துபாய் சுகாதாரத் துறை அமைச்சர் ஹூமைத் முகம்மது ஓபைத் அல் கத்தாமியிடம் வியாழக்கிழமை வழங்கினார்.

துபாய் குடிமக்களுக்கும், துபாயில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் தேவையான மருத்துவத் திட்டங்களுக்கு உதவ இந்த நிதியுதவியை அளித்துள்ளதாக மெர்ச்சன்ட் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கத்தாமி கூறுகையில், சுகாதாரத் துறையின் மருத்துவத் திட்டங்களில் தனியாரையும் ஈடுபடுத்தும் முகமாகவே இதுபோன்ற நிதியுதவியை அரசு பெறுகிறது. துபாய் மக்கள் நல்ல சுகாதாரத்துடனும், நலத்துடனும் வாழ அரசுடன் கை கோர்த்து செயல்பட தனியாரும் முன் வர வேண்டியது அவசியமாகும் என்றார்.

எமிரேட்ஸ் அதிபருடன் இந்திய தூதர் சந்திப்பு

எமிரேட்ஸ் அதிபருடன் இந்திய தூதர் சந்திப்பு
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007



துபாய்:

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் ஸையித் அல் நஹ்யானை, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் தூதர்கள் சந்தித்துப் பேசினர்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான புதிய இந்திய தூதராக தல்மிஷ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்பட பத்து வெளிநாட்டு தூதர்கள் அமீரக அதிபரை சந்தித்தனர்.

அவர்களிடம் அதிபர் அல் நஹ்யான் பேசுகையில், அமீரகம் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே விரும்பகிறது. அதற்கு புதிதாக தங்களது நாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் தாங்கள் அமீரகத்தில் பணியாற்றுவது குறித்த தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஷேக் மன்சூர், வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எமிரேட்ஸில் புகையிலை விளம்பரங்களுக்கு தடை

எமிரேட்ஸில் புகையிலை விளம்பரங்களுக்கு தடை
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007



துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் புகையிலை தொடர்பான அனைத்து வகையான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் புகையிலை குறித்த விளம்பரங்களைத் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடல்நலம் குறித்த விளம்பர சட்டப்படி, பெரும் விற்பனை அங்காடிகள், கடைகள், எரிபொருள் நிரப்பும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகையிலை குறித்த விளம்பரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அறிஞர் மறைவுக்கு இரங்கல்

இஸ்லாமிய அறிஞர் மறைவுக்கு இரங்கல்
வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007


துபாய்:

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் வாரியத்தின் நிறுவனரும், பொருளாளருமான மெளலானா அப்துல் கரீம் பரேக்கின் மறைவுக்கு துபாய் இந்திய இஸ்லாமிய மையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பரேக், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று மரணமடைந்தார். பல்வேறு சமூக, கலாச்சார, மத அமைப்புகளில் பணியாற்றியுள்ளார் பரேக். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்குரான் குறித்த விளக்கத்தையும் உருதில் எழுதியுள்ளார்.

அவருடைய மறைவுக்கு துபாய் இந்திய இஸ்லாமிய மையத் தலைவர் எஸ்.எம். சையத் கலீல் இரங்கல் தெரிவித்துள்ளார். மையத் துணைத் தலைவர் முகம்மது சல்மான் அகமதவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயில் ரமலான் நோன்பு தொடங்கியது

துபாயில் ரமலான் நோன்பு தொடங்கியது
வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007



- முதுவை ஹிதாயத்

துபாய்:

துபாயில் ரமலான் மாத நோன்பு வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்ற புனித மாதம் ரமலான் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் இம்மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு பிடித்து வருகின்றனர்.

ரமலான் மாதம் துவங்கப்பட்டதையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.

ரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) சார்பில் தமிழகத்து நோன்புக்கஞ்சி தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலியின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதத்தில் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக அளிக்கப்படுகிறது. ரமலான் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரமலான் மாதம் துபாயில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகும். பகல் நேரங்களில் பொது இடங்களில் உணவருந்த அனுமதியில்லை. எனினும் பார்சல் எடுத்துச் சென்று வீட்டில் சாப்பிடலாம்.

கடந்த வருடம் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். காதர் மொகிதீன் நோன்புக்காலம் முழுவதையும் துபாயிலேயே இருக்க விரும்புவதாக குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 30, 2007

செளதியில் இந்திய மாணவி மாயம்

செளதியில் இந்திய மாணவி மாயம்

ஆகஸ்ட் 30, 2007

ரியாத்: ரியாத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இந்திய மாணவியைக் காணவில்லை.


ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் மீத்து. இவரை நேற்று பிற்பகல் முதல் ஷுமைசி என்ற இடத்திலிருந்து காணவில்லை.

இந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தோர், 0507225342 அல்லது 0500332509 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, August 29, 2007

சிங்கப்பூரில் 'புதியநிலா' தொகுப்பு நூல் வெளியீடு

சிங்கப்பூரில் 'புதியநிலா' தொகுப்பு நூல் வெளியீடு

ஆகஸ்ட் 23, 2007

சிங்கப்பூர்: 'புதியநிலா' மாத இதழின் பத்தாமாண்டு தொகுப்புநூல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடந்த விழாவுக்கு மா.அன்பழகன் மற்றும் எம்.ஒய்.முஹம்மது ரஃபீக் முன்னிலை வகிக்க, திரு எம். இலியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.



கவிஞர் திரு. இக்குவனம், தொகுப்பாசிரியர் திரு. ஜஹாங்கீர் அவர்களைப் பாராட்டி அந்தாதி வெண்பா பாடினார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் திரு அ.முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ஆங்கில விரிவுரையாளர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதியநிலா பத்தாமாண்டு நிறைவு தொகுப்பு மலரை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி சுமார் ஒரு மணி நேரம் நூலின் நயங்களைச் சுவையுடன் விரித்துரைத்தார்.



சிங்கப்பூர் எம்.இ.எஸ். உரிமையாளர் ஹாஜி அப்துல் ஜலீல், ஜமால் கஜூரா உரிமையாளர் ஹாஜி ஜமால் முஹம்மது ஆகியோர் முதல் பிரசுரத்தைப் பெற்றுக் கொண்டனர்.

புதியநிலா இதழின் நிறுவனரும், சிறப்பாசிரியரும் சிறப்பு மலரின் தொகுப்பாசிரியருமான திரு மு.ஜஹாங்கீர் ஏற்புரை நிகழ்த்தினார்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ நிகழ்ச்சிகளை கவித்துவமாய்த் தொகுத்து வழங்கிய அவ்விழாவில் சிங்கப்பூர் கவிச்சோலை மற்றும் கவிமாலைக் கவிஞர்கள் ஆறுபேர் 'புதியநிலா' என்ற தலைப்பில் கவிதை பாடியமைக்காக நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் முன்னணி பத்திரிக்கையாளர்கள், படைப்பிலக்கியவாதிகள், தமிழறிஞர்கள், வணிகர்கள், பிரமுகர்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொண்ட அவ்விழா ஓர் இலக்கியச் சங்கமமாகத் திகழ்ந்தது.

என்.ஆர்.ஐ. கணவர்களின் கொடுமைகளிலிருந்து

என்.ஆர்.ஐ. கணவர்களின் கொடுமைகளிலிருந்து
மனைவிகளைக் காக்க தனி சட்டம்

ஆகஸ்ட் 24, 2007

ஹைதராபாத்: வெளிநாடு வாழ் இந்திய கணவர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவ புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் தங்களது மனைவிகளை பலவிதங்களிலும் கொடுமைப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதுபோன்று வெளிநாடு வாழ் இந்தியக் கணவர்களால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பஞ்சாபில்தான் அதிகம் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திரா உள்ளது.

இதுபோன்ற கொடுமைக்கார கணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வர வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்த யோசனைகளைத் தெரிவிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் இத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமணங்கள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் கல்யாணத்திற்குப் பிறகு மனைவிகளை விட்டு விட்டு ஓடி விடும் கணவர்களின் கொட்டத்தை அடக்க முடியும். பாதிக்கப்படும் பெண்களுக்கு நிவாரணம் தேடித் தர முடியும்.

மனைவிகளைக் கொடுமைப்படுத்தும், சித்திரவதைப்படுத்தும் ஆண்களின் பாஸ்போர்ட்டுளை முடக்கும் வகையில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடாமல் தடுக்க முடியும் என்றனர்.

பல என்.ஆர்.ஐ கணவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், விசா பெறத் தேவைப்படுவதாக கூறி தங்களது திருமண சான்றிதழ்களை மனைவிகளிடமிருந்து நைசாக வாங்கிக் கொண்டு பறந்து விடுகிறார்கள். இதனால் அப்பாவி மனைவிமார்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

ஆந்திராவில் மட்டும் இதுவரை தவறு செய்து விட்டு வெளிநாடுளுக்குத் தப்பி விட்ட என்.ஆர்.ஐ கணவர்களைக் கைது செய்ய, இன்டர்போல் அமைப்பு 320 ரெட் அலர்ட் நோட்டீஸ்களை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்.ஆர்.ஐ கணவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பி அவர்களுடன் வெளிநாடுளுக்குச் சென்றுள்ள பல பெண்கள் அங்கு சித்திரவதை வாழ்க்கையைத்தான் அனுபவித்து வருகின்றனர். பலர், தாயகம் திரும்பி விவாகரத்து செய்து கொண்டு வேறு வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கின்றனர்.

என்.ஆர்.ஐ கணவர்களால் பாதிக்கப்படும் மனைவியரின் எண்ணிக்கை நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகம். அதேசமயம் இன்டர்போல் போலீஸால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆந்திராவில்தான் அதிகம்.

வெளிநாடு வாழ் இந்தியக் கணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், புகார்கள் குறித்தும் கவனிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தனிப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கணவர்களால் கைவிடப்படும் மனைவிகளுக்கு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் நிதியுதவியும் செய்து வருகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே தற்போது கடுமையான சட்டம் ஒன்றைக் கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

சதாம் மகளைத் தேடும் இன்டர்போல்!

சதாம் மகளைத் தேடும் இன்டர்போல்!

ஆகஸ்ட் 20, 2007

ரியாத்: தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகள் ராகத் உசேனை, சர்வதேச போலீஸ் தேடி வருகிறது.

சர்வதேச காவல்துறை தேடிவரும் பட்டியலில் ராகத் உசேன் (38) பெயர் இடம் பெற்றுள்ளது. சதாமின் மூத்த மகள்தான் ராகத். இவர் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அறிவித்து அவரைத் தேடி வருகிறது இன்டர்போல்.



இதுதொடர்பாக இன்டர்போல் ரெட் அலர்ட்டை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இது கைது வாரண்ட் அல்ல. மாறாக வெளிநாட்டு காவல்துறையினர் ராகத் இருப்பிடம் குறித்து அறிய வந்தால், அவரை சர்வதேச போலீஸாரிடம் ஒப்படைத்து ஈராக் நீதிமன்றத்தின் நிறுத்த உதவ வேண்டும் என இன்டர்போல் வெளியிட்டுள்ள ரெட் அலர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ராகத் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஜோர்டான் நாட்டில் வசித்து வருகிறார். சிறிய சதாம் என்றழைக்கப்படும் இவர் தனது தந்தை கைது செய்யப்பட்டதும் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார்.

ராகத், ஜோர்டான் மன்னரின் விருந்தினராக இருந்து வருகிறார். கடந்த வருடம் ஈராக் அரசு ராகத்தை ஒப்படைக்க கேட்டுக் கொண்டாலும் அதனை ஜோர்டான் மறுத்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

செப். 13ம் தேதி ரமலான் பிறப்பு?

செப். 13ம் தேதி ரமலான் பிறப்பு?

ஆகஸ்ட் 22, 2007

ஷார்ஜா: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் வருகிற செப்டம்பர் 13ம் தேதி பிறக்கும் என அரபு வானியல் அறிஞர் கணித்துள்ளார்.

இதுகுறித்து வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துக்கான அரபு யூனியனின் தலைவரும், ஷார்ஜாவில் உள்ள ஹுமானிட்டிஸ் மற்றும் அறிவியல் கல்லூரியின் டீனுமான டாக்டர் ஹூமைத் அல் நுவாமி கூறுகையில்,

செப்டம்பர் 13ம் தேதி ரமலான் மாதத்தின் முதல் நாள் பிறக்கும் என தெரிய வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்டில் பின்பற்றப்படும் அளவீடுகளைக் கொண்டு எனது கணிப்புகளை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

ரமலான் மாதப் பிறப்பு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும். அதுவே சரியான தேதியாகவும் இருக்கும்.

அபுதாபிக்குச் செல்லும் இந்திய போர்க் கப்பல்கள்

அபுதாபிக்குச் செல்லும் இந்திய போர்க் கப்பல்கள்

ஆகஸ்ட் 24, 2007

அபுதாபி: நல்லெண்ண பயணாக இந்திய கடற்படையின் இரு போர்க் கப்பல்கள் அபுதாபிக்கு வருகை தரவுள்ளன.

இந்தியாவின் மேற்கு கடற்படை கமாண்டைச் சேர்ந்த ஐ.என்.எஸ். ராஜ்புத், கிழக்கு கமாண்டைச் சேர்ந்த ஐ.என்.எஸ். பேட்வா ஆகிய இரு கப்பல்களும் நல்லெண்ண பயணமாக அபுதாபிக்கு வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி விஜயம் செய்யவுள்ளன.

இத்தகவலை அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த இரு கப்பல்களும் முறையே மும்பை மற்றும் விசாகப்பட்டனத்திலிருந்து அபுதாபிக்கு வருகின்றன.

இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே, கலாச்சாரம் மற்றும் கடல் பாரம்பரியத்திற்க வலு கூட்டும் வகையில் இந்த போர்க் கப்பல்கள் வருகின்றன.

வளைகுடா நாடுகளுக்கு இதற்கு முன்பும் பலமுறை இந்திய போர்க் கப்பல்கள் வந்துள்ளன. இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவதை உறுதி செய்யும் வகையில் இந்தியக் கப்பல்கள் அங்கு வந்துள்ளன.

நாடு திரும்பும் பொது மன்னிப்பு பெற்ற இந்தியர்கள்

நாடு திரும்பும் பொது மன்னிப்பு பெற்ற இந்தியர்கள்

ஆகஸ்ட் 24, 2007

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததற்காக நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கிடைத்து நாடு திரும்ப வழி கிடைத்துள்ளதால் பெரும் நிம்மதியும், சந்தோஷமும் அடைந்துள்ளனர்.

அரபு நாடுகளில் வேலை தேடி டூரிஸ்ட் விசா மூலம் வந்த பல இந்தியத் தொழிலாளர்கள், இங்கு வந்த பின்னர் வேலை தேடி சட்டவிரோதமாக குடியேறி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் அங்குள்ள சிறைகளில் அடைபட நேரிடுகிறது.

இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது மன்னிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்படி சொந்த நாடு திரும்ப வழி பிறந்த இந்தியத் தொழிலாளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்களில் நாராயணன் மற்றும் சந்தோஷம் ஆகியோரும் அடக்கம்.

இவர்களும் மற்றவர்களைப் போல டூரிஸ்ட் விசாவில் துபாய் வந்தவர்கள்தான். தற்போது பொது மன்னிப்பு மூலம் தாயகம் திரும்பக் காத்துள்ளனர். இவர்களுக்கு இலவச விமான டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் நாடு திரும்புகிறார்கள். இவர்களைப் போல 36 இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்புகின்றனர்.

இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், நல்ல சம்பளத்துடன் வேலை பார்ப்பதற்காகத்தான் இங்கு விசிட் விசாவில் வந்தேன். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. எனவே சிறையில் அடைபடுவதை விட இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நாடு திரும்ப முடிவு செய்து விட்டேன்.

பொது மன்னிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஓ.கே. ஆகி விட்டன. ஆகஸ்ட் 26ம் தேதி நான் ஊர் திரும்ப விமானத்தில் ஏறவுள்ளேன். ஊரில் எனக்கு இன்னும் கொஞ்சம் கடன் உள்ளது. ஆனால் அதை நினைத்தால் இங்கு எனக்கு சிறைதான் கிடைக்கும். எனவேதான் ஊர் திரும்புகிறேன் என்றார்.

சந்தோஷ் உள்ளிட்ட பொது மன்னிப்பு கிடைத்தத் தொழிலாளர்களுக்கு துபாயைச் சேர்ந்த இந்திய நிறுவனமான வேலி ஆப் லவ், இலவச டிக்கெட்டுக்களை வழங்கியது. இவர்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பவுள்ளனர்.

வேலி ஆப் லவ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஆர்.கே.நாயர் கூறுகையில், படிப்படியாக இலவச டிக்கெட்டுக்களை வழங்கி வருகிறோம். அடுத்த வாரம் மேலும் சிலருக்கு டிக்கெட் தரப்படவுள்ளது. இந்தியர்கள் மட்டுமல்லாது, இலங்கை, எத்தியோப்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நாங்கள் இலவச டிக்கெட்டுகளை வழங்கி அவர்களும் தாயகம் திரும்ப உதவுகிறோம் என்றார்.

ஜார்ஜ் என்பவர் கூறுகையில், பொது மன்னிப்பு கிடைக்கப் பெற்றவர்களிடம், மறுபடியும் தவறான ஏஜென்டுகள் மூலம் இங்கு வந்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என அறிவுரை கூறி நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றார்.

நொறுக்கும் போர் .. வாழ வழியில்லை!

நொறுக்கும் போர் .. வாழ வழியில்லை!
உடலை விற்கும் அவலத்தில் ஈராக் விதவைகள்!!

ஆகஸ்ட் 25, 2007

-அபூ ஸாலிஹா

அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து ஈராக்கில் நாள்தோறும் நடக்கும் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் தொடர்கதையாய் இருக்க அதனால் ஆண்கள் கூட்டம் கூட்டமாய் செத்துமடிய, உயிருக்குப் போராடும் பிள்ளைகளைக் காக்க விபச்சாரப் படுகுழியில் தள்ளப்படும் ஈராக்கியப் பெண்களின் நிலை கல்நெஞ்சையும் உருக்கும் வகையில் இருக்கிறது.

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத் தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தைக் காக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.

பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன.

சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.

நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்:

ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என் குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை

இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய ரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை.

என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன்.

அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை ...

நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்:

ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறி வருவதை எவரும் மறுக்க இயலாது.

அமெரிக்கப் படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி மற்றும் உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.

அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும், கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15% பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது.

எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 பேர் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் 80 லட்சத்திற்கும் அதிகம் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.

துயரமான வியாபாரம்:

விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு (?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார்.

இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார்.

"ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.

வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பெண்கள்:

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.

தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறுகையில், தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது.

விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப் பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில், ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம்.

அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண்.

தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:

"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.

அரபு நாடுகளில் பணிப்பெண்கள் நியமனம்:

அரபு நாடுகளில் பணிப்பெண்கள் நியமனம்:
செப். 1 முதல் அமல் புதிய கட்டுப்பாடுகள்

ஆகஸ்ட் 25, 2007

ரியாத்: அரபு நாடுகளில் வேலை பார்க்க இந்தியாவிலிருந்து பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. சரியான சம்பளம் தரப்படுவதில்லை, அதிக வேலை வாங்குவது மற்றும் பாலியல் தொல்லைகளும் கொடுக்கப்படுவதாக புகார்கள் குவிந்தன.

இதையடுத்து அரபு நாடுகளில் பணியமர்த்தப்படும் இந்திய பணிப் பெண்களை தேர்வு செய்வதில் பலவித கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சவூதி அரேபியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்கா தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 400 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அந்தப் பெண்களின் பெயரில், இந்திய தூதரகத்தில் 2500 டாலரை காப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் பணிப்பெண்களாக நியமிக்க வேண்டும். வீட்டு வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மொபைல் போன் வசதி செய்து தரப்பட வேண்டும். அவர்களின் எண்களை இந்திய தூதரகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

புதிய கட்டுப்பாட்டுகளின்படி, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாஸ்போர்ட்டில் குடியுரிமை சோதனை அவசியம் என்ற முத்திரை பதிக்கப்படும். மேலும், வேலை தருவோர் அது தொடர்பான நியமன உத்தரவின் நகலை சம்பந்தப்பட்ட நாட்டின் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதையடுத்து அவர்கள் குறித்து இந்திய தூதரகம் விசாரணை நடத்தும். அதன் பின்னரே பணி நியமன ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

இந்த கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து இந்தியத் தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டு வேலைக்கான பணிப் பெண்கள், பட்லர்கள், சமையல் வேலை செய்யும் பெண்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத், லிபியா, ஜோர்டான், சூடான், ஏமன், சிரியா, லெபனான், புரூணே, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். ஈராக்கும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

வளைகுடா நாடுகளில் 2 லட்சம் இந்தியப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சவூதியில் 15 ஆயிரம் பேர் வீட்டுப் பணிப் பெண்களாக உள்ளனர்.

மேலும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பிற தொழிலிலும் இந்தியப் பெண்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

ஆர்.ஏ.கே.: இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்

ஆர்.ஏ.கே.: இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்கம்

ஆகஸ்ட் 27, 2007

துபாய்: ராஸ் அல் கைமாவில் இந்தியா இன்டர்நேஷனல் கிளப் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.

இதில் துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் வேணு ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரக்கீன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் இம்மாத் ஹப்பர், ஜெனரல் அல் நூபி முகம்மது உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூத்த இந்தியரான மங்கம்மாள் பஞ்சோலியா கெளரவிக்கப்பட்டார்.

பின்னர் பாலிவுட் கலைஞர்கள் கலந்து கொண்ட ஏக் ஷாம் இந்தியா கே நாம் என்ற பெயரிலான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது.

விஜய் தாவ்தா, திலீப் மேத்தா ஆகிேயார் நிகிழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினர். இந்தியா இன்டர்நேஷனல் கிளப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை நாராயணன் பாபிலானி விளக்கிப் பேசினார். கீதா பாபிலானி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் துபாய் வணிகரின் மகன் பலி

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் துபாய் வணிகரின் மகன் பலி

ஆகஸ்ட் 28, 2007

துபாய்: துபாயில் தொழில்புரிந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் 16 வயது மகன் முஹம்மது யஹ்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலியானார்.

முஹம்மது யஹ்யா ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா இளநிலை கல்லூரியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து யஹ்யாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து அங்கு சென்ற பொழுது யஹ்யா பிணமாக கிடந்தது கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஆந்திர மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, August 8, 2007

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...
-

லக்கி ஷாஜஹான்.
======================

நாலைந்து

வாரத்திற்கு முந்தைய ஒரு வியாழக்கிழமை .. இரவு 12 மணிக்கு டீவியில் படம் பார்த்துக் கொண்டே தூக்கத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் இருந்தபோது செல்பேசி அழைத்தது. இந்நேரத்துக்கு யாராக இருக்கும் என்று பார்த்தால் அழைப்பில் இருந்தது சித்தப்பா...
யாரோ ஒரு தமிழகத்துப் பெண்மணி

- சௌதிக்கு வேலைக்கு வந்தவர் என்ன பிரச்னைகளோ தெரியவில்லை , வேலை பார்க்கும் அரபி வீட்டிலிருந்து ஓடி வந்து பத்தாவில் அந்தப் பெண்மணியின் உறவினர் வீட்டில் அடைக்கலம் ஆகியிருப்பதாகவும், அந்த உறவினர் சித்தப்பாவை சந்தித்து, அந்தப் பெண்மணியை ஊருக்கு அனுப்பி வைக்க என்ன வழி என்று கேட்க, தூதரகத்தை அணுக ஆலோசனை கூறிவிட்டு உதவிக்கு என்னை கைக்காட்டியிருப்பதாகவும் நாளை அவர்களைப் போய் சந்திக்கும்படியும் சொல்ல மறுநாளே நண்பர் ஒருவருடன் நான் அந்தப் பெண்மணியை அவர் உறவினர் வீட்டில் வைத்து சந்தித்தேன் .
* * *

பொதுவாகவே வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக சௌதி அரேபியாவிற்கு தமிழகத்தை சேர்ந்த பெண் மணிகள் வேலைக்கு வருவதில்லை

.விசா வழங்கப்படுவதில்லையா அல்லது நம் தாய்க்குலங்கள் விரும்புவதில்லையா என்று நெடுநாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு . திருநெல்வேலியை சேர்ந்த ஃபாத்திமா பீவிக்கு( பெயர் மாற்றியிருக்கிறேன் ) கல்யாண வயதில் இரண்டு பெண்கள். எந்தவித அனுசரணையும் உறவுகளிடம் பெரிதான அளவில் உதவிகளும் கிடைக்கப் பெறாத ஒரு வறட்சியான தருணத்தில் சௌதியில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை - டிராவல்ஸில் விசா இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதீதமாய் தகுதிக்கு மீறிய கடன் சுமையோடு பணம் கட்டி சௌதி வந்து இறங்கி விட்டார் ஐம்பது வயதான ஃபாத்திமாபீவி.
இது போல் வீட்டு வேலை செய்ய வந்த பெண்களை சௌதி பாஷையில்

"ஹத்தம்மா " என்று அழைக்கிறார்கள். வேலைக்கு வந்த சௌதி வீட்டில் அந்த சௌதியின் மகள் திருமணம் வரை ஃபாத்திமா பீவி வேலை பார்த்திருக்கிறார் .பின்பு அந்த சௌதி அவரை தன் சகோதரி வீட்டில் வேலை பார்க்க கொண்டு போய் விட அந்த புதிய வீட்டில் ஏற்கனவே இன்னும் நான்கு பணிப்பெண்கள் . கென்யா, ஃபிலிப்பைன் , இந்தோனேஷியா,இலங்கை என்ற நான்கும் நான்கு தேசம் .இதல்லாது நம் தமிழத்தை சேர்ந்த ஓட்டுனர் வேலை பார்க்கும் இளைஞரும் ஒருவர் .
பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை பார்த்து வரும் மூத்த

- சீனியர் கிரேடு - வேலைக்கார அம்மணி-இந்தோனேஷிய பெண்மணிக்கு ஃபாத்திமா பீவியை கண்டாலே ஆவதில்லை . நாயை வேலை சொன்னால் அது வேறெதையோ வேலை ஏவுமாம் என்று சொல்வது போல் அந்த சௌதி பெண்மணி சொல்லும் வேலைகளை ஃபாத்திமா பீவியிடம் செய்ய சொல்லிவிட்டு ஹாயாக இருந்திருக்கிறார் இந்தோனேஷியப் பெண்மணி .இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் என்ற விதிமுறையில் ஃபாத்திமாபீவிக்கு முன்பு வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது .. ஆனால் இங்கு வந்த பிறகு அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சில போது நினைத்துக் கொண்டால் தருவது என்றெல்லாம் சம்பளம் அலைக்கழிக்கப்படிருக்கிறது .
சௌதி பெண்மணியும்

- ஃபாத்திமா பீவியும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு தானே எஜமானி போல் அதிகாரம் செய்து வந்திருக்கிற இந்தோனேஷிய பெண்மணிக்கும் - நம்மூர் ட்ரைவருக்கும் ஏதோ Understand இருந்திருக்கிறது (கஷ்டம்டா சாமி.. ) . அதனால் அந்த ட்ரைவரும் ஃபாத்திமா பீவியை இந்தியர்தானே - தமிழ்நாடுதானே என்றெல்லாம் பார்க்காமல் ஃபாத்திமா பீவியை ஏமாற்றவும் ஆரம்பித்திருக்கிறார் .அவரிடம் ஃபாத்திமா பீவி தான் வாங்கிய சம்பளத்தை கொடுத்து ஊருக்கு அனுப்ப சொல்ல முதல் தடவை மட்டும் அந்தப் பணம் வீட்டுக்குப் போயிருக்கிறது . அதற்குப் பின் அனுப்பியவை என்ன ஆனதென்றே தெரியவில்லை. நான் பணம் அனுப்பி வைத்தேன்.. கிடைக்காததுக்கு நான் என்ன பண்ண முடியும் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார் அந்த ட்ரைவர் .வெளி நாட்டில் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .. அந்த ட்ரைவர் நிரூபித்திருக்கிறான்.
ஒரு காலகட்டத்துக்கு அப்பால் ஃபாத்திமா பீவிக்கு தொந்தரவுகள் அதிகமாக ஆரம்பித்திருக்கிறது

. சாப்பிடும் உணவில் குளோரக்ஸ் ஊற்றித் தந்து சாப்பிடச் சொல்லியது அதில் ஒரு உச்சபட்ச கொடுமை . இதற்கிடையே அந்த சௌதி பெண்மணியின் பெண் குழந்தைகளை பள்ளியில் விட்டு அழைத்து வருவது அந்த ட்ரைவரின் கடமைகளில் ஒன்று . அந்த குழந்தைகளிடம் இவன் ஏதோ பாலியல் தொந்தரவு செய்ய முயன்றிருக்கிறான். அதை குழந்தைகள் வந்து சொல்ல அவனை கண்காணிக்க அந்த சிறுமிகளுடன் ஃபாத்திமா பீவியையும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைக்க கடுப்பான ட்ரைவர் சிறுமிகளை விட்டு வரும்போது காரை கன்னாபின்னாவென்று ஓட்டி கண்டபடி பயம் காட்டி இனிமே நான் போகவில்லை என்று ஃபாத்திமா பீவி கதறிக் கொண்டு சௌதி பெண்மணியிடம் சொல்லுமளவிற்கு செய்திருக்கிறான் .இதைப் புரிந்து கொள்ளாத சௌதி பெண்மணியும் நான் சொன்ன வேலையை செய்ய முடியாதா என்று அடித்து அவள் பங்குக்கும் காயப்படுத்தியிருக்கிறாள் . முன்னைவிட ஃபாத்திமா பீவி மீதான தாக்குதல்கள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன .
எதேச்சையாக ஒரு நாள் தன் அத்தை வீட்டுக்கு வந்த முன்னாள் சௌதியின் மகள்

- ஃபாத்திமா பீவியைப் பார்த்து அவர் நிலை கண்டு பரிதாபப்பட்டு மறுநாளே தந்தை வீட்டிலிருந்து ஃபாத்திமாபீவியின் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து தந்து அங்கிருந்து எப்படியாவது போய்விடுமாறு சொல்லி உதவி செய்து விட்டு போக அந்த வீட்டிலிருந்த மற்றொரு இலங்கை தேசத்து பணிப்பெண் அந்த வீட்டை விட்டு வெளியேற கையிலிருந்த காசு தந்து உதவி செய்ய ஃபாத்திமா பீவி டாக்ஸி ஏறி பத்தா வந்து விட்டார் .
* * *

முகத்தில் கிழிக்கப்பட்ட காயங்களுடனும்

,தூக்கங்கள் பார்த்து வெகு நாளான, சோர்ந்து போயிருந்த ஃபாத்திமா பீவியைப் பார்க்க மனம் வேதனையில் கசிந்து போனது .. என் அம்மா வயது பெண்மணி.. சம்பாதிக்கும் பொருட்டு வந்து இப்போது ஊருக்கு போனால் போதும் என்றிருக்கிறார் . அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தேன். அப்போதுதான் இன்னொரு திகைப்பான தகவலும் தெரிந்தது.. அவர் வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் இக்காமாவே அடித்து தரவில்லையாம் .. எந்த ஏரியாவில் வேலை பார்த்தார் என்று எந்த விபரமும் சொல்லத் தெரியவில்லை .டாக்ஸியில் ஏறி இங்கு வந்து சேர டாக்ஸி ட்ரைவர் ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டதாக சொன்னார். ஒரு மணி நேரம் பயணித்த தூரம் இருக்கலாம் என்றார்..இதை தவிர என்னால் வேறெந்த தகவலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை .
உடனே இது தொடர்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் மூத்த நண்பர் ஒருவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தேன்

. அவர் வழிகாட்டியதன் பேரில் காரியத்தில் இறங்க மளமளவென்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது . இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இது போல் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் பேசினேன் . அவர் ஆலோசனையின் படி இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வரச் சொல்ல அதே போல் நண்பர் ஒருவரின் காரில் அவரை அழைத்து செல்ல அங்கு காத்திருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஃபாத்திமா பீவியை ஒப்படைக்க அவர்கள் அவரை தம் வாகனத்தில் ஏற்றி இந்திய தூதரகம் கொண்டு சென்றார்கள் .
அங்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் சட்டப்படி வேகமாய் நடைபெறத் தொடங்கியது

.இந்திய தூதரகத்தில் சரணடைந்த ஒரு மாதத்துக்குள் நிச்சயம் ஊர் போய் சேர்ந்து விடலாம் என ஒரு அதிகாரி உறுதியளித்தார் .பத்தா வந்து எந்த இடத்தில் ஃபாத்திமா பீவி அடைக்கலமானாரோ அந்த இரக்கமுள்ள மனிதர்களே அவருக்கு விமான பயண சீட்டும் எடுத்து தந்திருந்தார்கள் . அதை ஃபாத்திமா பீவி நன்றியுடன் நினைவு கூறும்போதுதான் இன்னொரு விவரமும் தெரிந்தது .. அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பம் அவருக்கு உறவினர்கள் இல்லையாம்.. பத்தாவில் வந்து இறங்கிய இடம் அந்தவீட்டுக்கு எதிரே என்பதால் விவரம் கேட்கப் போய் ஆறுதலாய் அரவணைக்கப்பட்டு - உபசரிக்கப்பட்டு - உதவி செய்யப்பட்டிருக்கிறார் ஃபாத்திமா பீவி. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
தற்போது இந்திய தூதரகத்தின் விசாரணையிலும்

, ஊருக்கு அனுப்பபடும் முன்னேற்பாட்டிலும் இருக்கும் ஃபாத்திமா பீவி நலமுடன் அவர்கள் வசம் இருந்தாலும் , ஊருக்கு சென்ற பின்பு அவர் எதிர்கொள்ளவிருக்கும் கடன் போன்ற பிரச்னைகள் ஏராளம் . காசு வாங்கி ஆளை ஏற்றிவிட்டால் சரி என இருக்கும் ஏஜென்ஸிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . இனியாவது பொருளீட்ட அரபு தேசம் வரும் நம் தாய்நாட்டு சகோதரிகள் இது குறித்து சிந்திப்பார்களா ..?
பின்னுரையாய் சில சங்கடங்கள்

.
1.

இகாமா அடிக்காமலேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாலும் ஊர் திரும்ப இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .எனவே ஃபாத்திமா பீவி சம்பிரதாய விசாரணை முடிந்து ஊர் திரும்ப ஒரு மாதமாகலாம் என தெரிகிறது. நாங்கள் ஃபாத்திமா பீவியை ஒப்படைத்த போது குறைந்த பட்சம் அவர் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை.ஒரு மாத காலம் எப்படி இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை .
2.

தமிழ் சினிமாவின் சாகஸ கிளைமாக்ஸ் போல் ஃபாத்திமா பீவியை அழைத்துக் கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் வரை நானும் நண்பரும் ஒரு பெரும் அவஸ்தைக்குள்ளானோம் . வழியில் எங்கேனும் காவல்துறை குறுக்கிட்டால் என்ன சொல்வது அல்லது நாங்கள் சொல்லும் காரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமே காரணம் .. நிறைய பேர் இது போன்ற நிலைப்பாடு உள்ளவர்களுக்கு உதவி செய்ய மனமிருந்தும் ஒதுங்கிப் போவது இதனால் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது .
3.

நேபாளிப் பெண் கொலை வழக்கில் கொலையாவதற்கு முன் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக டாக்டர் ஒருவரும் ,அவர் மனைவியும் தற்போது சிறையில் இருப்பது அனேகமாய் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இதற்குப் பின் எப்படி எல்லோருக்கும் இது போன்று ஓடி வந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முன் வர முடியும்..?
4.

இந்திய தூதரகம் வசம் இருக்கும் ஃபாத்திமா பீவி தன் வீட்டுக்கு போன் செய்து வர இன்னும் ஒரு மாதமாகும் என சொல்ல அவர்களின் பிள்ளைகள் இங்கு அவர் தங்கியிருந்த வீட்டினர்க்கு போன் போட்டு சீக்கிரம் வர ஏற்பாடு செய்யுங்கள் என நச்சரிக்க அவர்கள் என்னை அழைத்து எப்போது போவார்கள் ..எப்போது போவார்கள் என கேட்க ஏண்டா இதில் இறங்கினோம் சாமி என்றாகி விட்டது.. வேலியில் போன ஓணானை........
5.

ஃபாத்திமா பீவியை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் அன்று ஹுஸைன் மரைக்காயர் இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளாக மேலும் மூன்று பொது சேவைக்காய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பார்க்க அங்குள்ள சில பணியாளர்கள் காசுக்காக வேலை செய்யும் ஏஜெண்டாக என்னை நினைத்து 'ட்ரீட்' செய்தது கொஞ்சம் மனதை வலிக்க செய்தது . பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் மனதை தேற்றிக் கொண்டு வேலை முடிந்தால் சரி என்று வந்து விட்டேன் .
* * *

அரபு

தேசம் முழுக்க இது போல் ஆயிரத்தெட்டு பிரச்னைகள்.. பிரச்னைகளுடனே இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் என இந்திய தூதரகம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமிருப்பதாகவும், நிறைய பிரச்னைகள் எந்த முடிவையும் நோக்கிப் போகாமல் இழுவையிலேயே இருப்பதாகவும் இந்திய தூதரகம் தொடர்புடைய நண்பர்கள் சிலர் சொல்ல வருத்தமாய் இருக்கிறது. எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவோம்.
ஃபாத்திமா பீவி நல்ல முறையில் விமானம் ஏறி தாயகம் இறங்கிவிட்டார் என்ற நல்ல செய்திக்குப் பின்னால் உடனடியாக நான் செய்தது

- இந்த பதிவிடும் வேலைதான்....
சம்பளப் பிடித்தம் உறுதியான மூன்று காலை நேரங்கள்

, ஆங்காங்கே செல் பேசிய செலவுகள் என பொருளாதார ரீதியாய் எனக்கும் கொஞ்சம் இழப்புகள் இருந்தும் சில கண்ணீர் துளிகள் துடைக்கப்படும் பின்பு ஏற்படும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் முன்னால் அதெல்லாம் பெரிதாய் தெரியவே இல்லை .சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .
* * * * * * *

=================================================

லக்கி ஷாஜஹான்
தமிழே சுவாசமாய்...
www.riyadhtamilsangam.com
lucky shajahan [luckyshajahan@gmail.com]

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...

சௌதிக்கு வேலைக்கு வரும் தாய்க்குலங்களுக்கு...
-

லக்கி ஷாஜஹான்.
======================

நாலைந்து

வாரத்திற்கு முந்தைய ஒரு வியாழக்கிழமை .. இரவு 12 மணிக்கு டீவியில் படம் பார்த்துக் கொண்டே தூக்கத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் இருந்தபோது செல்பேசி அழைத்தது. இந்நேரத்துக்கு யாராக இருக்கும் என்று பார்த்தால் அழைப்பில் இருந்தது சித்தப்பா...
யாரோ ஒரு தமிழகத்துப் பெண்மணி

- சௌதிக்கு வேலைக்கு வந்தவர் என்ன பிரச்னைகளோ தெரியவில்லை , வேலை பார்க்கும் அரபி வீட்டிலிருந்து ஓடி வந்து பத்தாவில் அந்தப் பெண்மணியின் உறவினர் வீட்டில் அடைக்கலம் ஆகியிருப்பதாகவும், அந்த உறவினர் சித்தப்பாவை சந்தித்து, அந்தப் பெண்மணியை ஊருக்கு அனுப்பி வைக்க என்ன வழி என்று கேட்க, தூதரகத்தை அணுக ஆலோசனை கூறிவிட்டு உதவிக்கு என்னை கைக்காட்டியிருப்பதாகவும் நாளை அவர்களைப் போய் சந்திக்கும்படியும் சொல்ல மறுநாளே நண்பர் ஒருவருடன் நான் அந்தப் பெண்மணியை அவர் உறவினர் வீட்டில் வைத்து சந்தித்தேன் .
* * *

பொதுவாகவே வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக சௌதி அரேபியாவிற்கு தமிழகத்தை சேர்ந்த பெண் மணிகள் வேலைக்கு வருவதில்லை

.விசா வழங்கப்படுவதில்லையா அல்லது நம் தாய்க்குலங்கள் விரும்புவதில்லையா என்று நெடுநாளாகவே எனக்கு ஒரு சந்தேகம் உண்டு . திருநெல்வேலியை சேர்ந்த ஃபாத்திமா பீவிக்கு( பெயர் மாற்றியிருக்கிறேன் ) கல்யாண வயதில் இரண்டு பெண்கள். எந்தவித அனுசரணையும் உறவுகளிடம் பெரிதான அளவில் உதவிகளும் கிடைக்கப் பெறாத ஒரு வறட்சியான தருணத்தில் சௌதியில் வீட்டு வேலைக்கு ஆள் தேவை - டிராவல்ஸில் விசா இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதீதமாய் தகுதிக்கு மீறிய கடன் சுமையோடு பணம் கட்டி சௌதி வந்து இறங்கி விட்டார் ஐம்பது வயதான ஃபாத்திமாபீவி.
இது போல் வீட்டு வேலை செய்ய வந்த பெண்களை சௌதி பாஷையில்

"ஹத்தம்மா " என்று அழைக்கிறார்கள். வேலைக்கு வந்த சௌதி வீட்டில் அந்த சௌதியின் மகள் திருமணம் வரை ஃபாத்திமா பீவி வேலை பார்த்திருக்கிறார் .பின்பு அந்த சௌதி அவரை தன் சகோதரி வீட்டில் வேலை பார்க்க கொண்டு போய் விட அந்த புதிய வீட்டில் ஏற்கனவே இன்னும் நான்கு பணிப்பெண்கள் . கென்யா, ஃபிலிப்பைன் , இந்தோனேஷியா,இலங்கை என்ற நான்கும் நான்கு தேசம் .இதல்லாது நம் தமிழத்தை சேர்ந்த ஓட்டுனர் வேலை பார்க்கும் இளைஞரும் ஒருவர் .
பத்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் வேலை பார்த்து வரும் மூத்த

- சீனியர் கிரேடு - வேலைக்கார அம்மணி-இந்தோனேஷிய பெண்மணிக்கு ஃபாத்திமா பீவியை கண்டாலே ஆவதில்லை . நாயை வேலை சொன்னால் அது வேறெதையோ வேலை ஏவுமாம் என்று சொல்வது போல் அந்த சௌதி பெண்மணி சொல்லும் வேலைகளை ஃபாத்திமா பீவியிடம் செய்ய சொல்லிவிட்டு ஹாயாக இருந்திருக்கிறார் இந்தோனேஷியப் பெண்மணி .இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளம் என்ற விதிமுறையில் ஃபாத்திமாபீவிக்கு முன்பு வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது .. ஆனால் இங்கு வந்த பிறகு அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை சில போது நினைத்துக் கொண்டால் தருவது என்றெல்லாம் சம்பளம் அலைக்கழிக்கப்படிருக்கிறது .
சௌதி பெண்மணியும்

- ஃபாத்திமா பீவியும் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டு தானே எஜமானி போல் அதிகாரம் செய்து வந்திருக்கிற இந்தோனேஷிய பெண்மணிக்கும் - நம்மூர் ட்ரைவருக்கும் ஏதோ Understand இருந்திருக்கிறது (கஷ்டம்டா சாமி.. ) . அதனால் அந்த ட்ரைவரும் ஃபாத்திமா பீவியை இந்தியர்தானே - தமிழ்நாடுதானே என்றெல்லாம் பார்க்காமல் ஃபாத்திமா பீவியை ஏமாற்றவும் ஆரம்பித்திருக்கிறார் .அவரிடம் ஃபாத்திமா பீவி தான் வாங்கிய சம்பளத்தை கொடுத்து ஊருக்கு அனுப்ப சொல்ல முதல் தடவை மட்டும் அந்தப் பணம் வீட்டுக்குப் போயிருக்கிறது . அதற்குப் பின் அனுப்பியவை என்ன ஆனதென்றே தெரியவில்லை. நான் பணம் அனுப்பி வைத்தேன்.. கிடைக்காததுக்கு நான் என்ன பண்ண முடியும் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறார் அந்த ட்ரைவர் .வெளி நாட்டில் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .. அந்த ட்ரைவர் நிரூபித்திருக்கிறான்.
ஒரு காலகட்டத்துக்கு அப்பால் ஃபாத்திமா பீவிக்கு தொந்தரவுகள் அதிகமாக ஆரம்பித்திருக்கிறது

. சாப்பிடும் உணவில் குளோரக்ஸ் ஊற்றித் தந்து சாப்பிடச் சொல்லியது அதில் ஒரு உச்சபட்ச கொடுமை . இதற்கிடையே அந்த சௌதி பெண்மணியின் பெண் குழந்தைகளை பள்ளியில் விட்டு அழைத்து வருவது அந்த ட்ரைவரின் கடமைகளில் ஒன்று . அந்த குழந்தைகளிடம் இவன் ஏதோ பாலியல் தொந்தரவு செய்ய முயன்றிருக்கிறான். அதை குழந்தைகள் வந்து சொல்ல அவனை கண்காணிக்க அந்த சிறுமிகளுடன் ஃபாத்திமா பீவியையும் குழந்தைகளுடன் சேர்த்து அனுப்பி வைக்க கடுப்பான ட்ரைவர் சிறுமிகளை விட்டு வரும்போது காரை கன்னாபின்னாவென்று ஓட்டி கண்டபடி பயம் காட்டி இனிமே நான் போகவில்லை என்று ஃபாத்திமா பீவி கதறிக் கொண்டு சௌதி பெண்மணியிடம் சொல்லுமளவிற்கு செய்திருக்கிறான் .இதைப் புரிந்து கொள்ளாத சௌதி பெண்மணியும் நான் சொன்ன வேலையை செய்ய முடியாதா என்று அடித்து அவள் பங்குக்கும் காயப்படுத்தியிருக்கிறாள் . முன்னைவிட ஃபாத்திமா பீவி மீதான தாக்குதல்கள் வலுப்பெற தொடங்கியிருக்கின்றன .
எதேச்சையாக ஒரு நாள் தன் அத்தை வீட்டுக்கு வந்த முன்னாள் சௌதியின் மகள்

- ஃபாத்திமா பீவியைப் பார்த்து அவர் நிலை கண்டு பரிதாபப்பட்டு மறுநாளே தந்தை வீட்டிலிருந்து ஃபாத்திமாபீவியின் பாஸ்போர்ட்டை எடுத்து வந்து தந்து அங்கிருந்து எப்படியாவது போய்விடுமாறு சொல்லி உதவி செய்து விட்டு போக அந்த வீட்டிலிருந்த மற்றொரு இலங்கை தேசத்து பணிப்பெண் அந்த வீட்டை விட்டு வெளியேற கையிலிருந்த காசு தந்து உதவி செய்ய ஃபாத்திமா பீவி டாக்ஸி ஏறி பத்தா வந்து விட்டார் .
* * *

முகத்தில் கிழிக்கப்பட்ட காயங்களுடனும்

,தூக்கங்கள் பார்த்து வெகு நாளான, சோர்ந்து போயிருந்த ஃபாத்திமா பீவியைப் பார்க்க மனம் வேதனையில் கசிந்து போனது .. என் அம்மா வயது பெண்மணி.. சம்பாதிக்கும் பொருட்டு வந்து இப்போது ஊருக்கு போனால் போதும் என்றிருக்கிறார் . அவரின் பாஸ்போர்ட்டை வாங்கி பரிசோதித்தேன். அப்போதுதான் இன்னொரு திகைப்பான தகவலும் தெரிந்தது.. அவர் வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்தும் இன்னும் இக்காமாவே அடித்து தரவில்லையாம் .. எந்த ஏரியாவில் வேலை பார்த்தார் என்று எந்த விபரமும் சொல்லத் தெரியவில்லை .டாக்ஸியில் ஏறி இங்கு வந்து சேர டாக்ஸி ட்ரைவர் ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டதாக சொன்னார். ஒரு மணி நேரம் பயணித்த தூரம் இருக்கலாம் என்றார்..இதை தவிர என்னால் வேறெந்த தகவலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை .
உடனே இது தொடர்பாய் பணிகளை செய்து கொண்டிருக்கும் மூத்த நண்பர் ஒருவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசித்தேன்

. அவர் வழிகாட்டியதன் பேரில் காரியத்தில் இறங்க மளமளவென்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது . இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு இது போல் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரியிடம் பேசினேன் . அவர் ஆலோசனையின் படி இந்தியத் தூதரகத்துக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்து வரச் சொல்ல அதே போல் நண்பர் ஒருவரின் காரில் அவரை அழைத்து செல்ல அங்கு காத்திருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஃபாத்திமா பீவியை ஒப்படைக்க அவர்கள் அவரை தம் வாகனத்தில் ஏற்றி இந்திய தூதரகம் கொண்டு சென்றார்கள் .
அங்கு நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் சட்டப்படி வேகமாய் நடைபெறத் தொடங்கியது

.இந்திய தூதரகத்தில் சரணடைந்த ஒரு மாதத்துக்குள் நிச்சயம் ஊர் போய் சேர்ந்து விடலாம் என ஒரு அதிகாரி உறுதியளித்தார் .பத்தா வந்து எந்த இடத்தில் ஃபாத்திமா பீவி அடைக்கலமானாரோ அந்த இரக்கமுள்ள மனிதர்களே அவருக்கு விமான பயண சீட்டும் எடுத்து தந்திருந்தார்கள் . அதை ஃபாத்திமா பீவி நன்றியுடன் நினைவு கூறும்போதுதான் இன்னொரு விவரமும் தெரிந்தது .. அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பம் அவருக்கு உறவினர்கள் இல்லையாம்.. பத்தாவில் வந்து இறங்கிய இடம் அந்தவீட்டுக்கு எதிரே என்பதால் விவரம் கேட்கப் போய் ஆறுதலாய் அரவணைக்கப்பட்டு - உபசரிக்கப்பட்டு - உதவி செய்யப்பட்டிருக்கிறார் ஃபாத்திமா பீவி. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
தற்போது இந்திய தூதரகத்தின் விசாரணையிலும்

, ஊருக்கு அனுப்பபடும் முன்னேற்பாட்டிலும் இருக்கும் ஃபாத்திமா பீவி நலமுடன் அவர்கள் வசம் இருந்தாலும் , ஊருக்கு சென்ற பின்பு அவர் எதிர்கொள்ளவிருக்கும் கடன் போன்ற பிரச்னைகள் ஏராளம் . காசு வாங்கி ஆளை ஏற்றிவிட்டால் சரி என இருக்கும் ஏஜென்ஸிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . இனியாவது பொருளீட்ட அரபு தேசம் வரும் நம் தாய்நாட்டு சகோதரிகள் இது குறித்து சிந்திப்பார்களா ..?
பின்னுரையாய் சில சங்கடங்கள்

.
1.

இகாமா அடிக்காமலேயே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாலும் ஊர் திரும்ப இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .எனவே ஃபாத்திமா பீவி சம்பிரதாய விசாரணை முடிந்து ஊர் திரும்ப ஒரு மாதமாகலாம் என தெரிகிறது. நாங்கள் ஃபாத்திமா பீவியை ஒப்படைத்த போது குறைந்த பட்சம் அவர் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை.ஒரு மாத காலம் எப்படி இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை .
2.

தமிழ் சினிமாவின் சாகஸ கிளைமாக்ஸ் போல் ஃபாத்திமா பீவியை அழைத்துக் கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் வரை நானும் நண்பரும் ஒரு பெரும் அவஸ்தைக்குள்ளானோம் . வழியில் எங்கேனும் காவல்துறை குறுக்கிட்டால் என்ன சொல்வது அல்லது நாங்கள் சொல்லும் காரணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமே காரணம் .. நிறைய பேர் இது போன்ற நிலைப்பாடு உள்ளவர்களுக்கு உதவி செய்ய மனமிருந்தும் ஒதுங்கிப் போவது இதனால் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது .
3.

நேபாளிப் பெண் கொலை வழக்கில் கொலையாவதற்கு முன் அந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக டாக்டர் ஒருவரும் ,அவர் மனைவியும் தற்போது சிறையில் இருப்பது அனேகமாய் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இதற்குப் பின் எப்படி எல்லோருக்கும் இது போன்று ஓடி வந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முன் வர முடியும்..?
4.

இந்திய தூதரகம் வசம் இருக்கும் ஃபாத்திமா பீவி தன் வீட்டுக்கு போன் செய்து வர இன்னும் ஒரு மாதமாகும் என சொல்ல அவர்களின் பிள்ளைகள் இங்கு அவர் தங்கியிருந்த வீட்டினர்க்கு போன் போட்டு சீக்கிரம் வர ஏற்பாடு செய்யுங்கள் என நச்சரிக்க அவர்கள் என்னை அழைத்து எப்போது போவார்கள் ..எப்போது போவார்கள் என கேட்க ஏண்டா இதில் இறங்கினோம் சாமி என்றாகி விட்டது.. வேலியில் போன ஓணானை........
5.

ஃபாத்திமா பீவியை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கும் அன்று ஹுஸைன் மரைக்காயர் இறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளாக மேலும் மூன்று பொது சேவைக்காய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை பார்க்க அங்குள்ள சில பணியாளர்கள் காசுக்காக வேலை செய்யும் ஏஜெண்டாக என்னை நினைத்து 'ட்ரீட்' செய்தது கொஞ்சம் மனதை வலிக்க செய்தது . பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் மனதை தேற்றிக் கொண்டு வேலை முடிந்தால் சரி என்று வந்து விட்டேன் .
* * *

அரபு

தேசம் முழுக்க இது போல் ஆயிரத்தெட்டு பிரச்னைகள்.. பிரச்னைகளுடனே இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் என இந்திய தூதரகம் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் ஏராளமிருப்பதாகவும், நிறைய பிரச்னைகள் எந்த முடிவையும் நோக்கிப் போகாமல் இழுவையிலேயே இருப்பதாகவும் இந்திய தூதரகம் தொடர்புடைய நண்பர்கள் சிலர் சொல்ல வருத்தமாய் இருக்கிறது. எல்லாம் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவோம்.
ஃபாத்திமா பீவி நல்ல முறையில் விமானம் ஏறி தாயகம் இறங்கிவிட்டார் என்ற நல்ல செய்திக்குப் பின்னால் உடனடியாக நான் செய்தது

- இந்த பதிவிடும் வேலைதான்....
சம்பளப் பிடித்தம் உறுதியான மூன்று காலை நேரங்கள்

, ஆங்காங்கே செல் பேசிய செலவுகள் என பொருளாதார ரீதியாய் எனக்கும் கொஞ்சம் இழப்புகள் இருந்தும் சில கண்ணீர் துளிகள் துடைக்கப்படும் பின்பு ஏற்படும் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் முன்னால் அதெல்லாம் பெரிதாய் தெரியவே இல்லை .சக மனிதர்க்கு பரஸ்பர உதவி செய்யும் வாய்ப்பை பெறுவதற்கு இன்னும் எவ்வளவு ரிஸ்க் வேண்டுமென்றாலும் எடுக்க தயாராகவே இருக்கிறேன் நான் ...இறைவன் போதுமானவன் .
* * * * * * *

=================================================

லக்கி ஷாஜஹான்
தமிழே சுவாசமாய்...
www.riyadhtamilsangam.com
lucky shajahan [luckyshajahan@gmail.com]

Saturday, August 4, 2007

அபுதாபிக்கு போகும் இந்திய வங்கிகள்

அபுதாபிக்கு போகும் இந்திய வங்கிகள்

ஆகஸ்ட் 04, 2007

துபாய்: இந்தியாவின் பெடரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு முன்னணி வங்கிகளும், அபுதாபியில் தங்களது அலுவலகங்களைத் திறக்கவுள்ளன.

இது தொடர்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பெடரல் பாங்க் லிமிடெட் வங்கிகளின் உயர் அதிகாரிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சென்ட்ரல் வங்கி தலைவரைச் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, அபுதாபி வாழ் இந்தியர்களுக்கு சிறந்த சேவையை செய்வது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர்

http://thatstamil.oneindia.in/news/2007/08/04/bank.html

Friday, August 3, 2007

துபாய்-தமிழ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மனைவி மரணம்

துபாய்-தமிழ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மனைவி மரணம்

ஆகஸ்ட் 03, 2007

துபாய்: துபாய் ஏசியாநெட் தொலைக்காட்சியின் தமிழ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாழர் ஆசிப் மீரானின் மனைவி யாஸ்மீன் பாத்திமா சென்னையில் காலமானார்.

புதன்கிழமை இரவு காலமான அவருக்கு பல்வேறு துபாய் தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.



http://thatstamil.oneindia.in/news/2007/08/03/obit.html

Thursday, August 2, 2007

துபாயில் விபச்சாரம்-3 உஸ்பெக் பெண்களுக்கு சிறை: நாடு கடத்தல்

துபாயில் விபச்சாரம்-3 உஸ்பெக் பெண்களுக்கு சிறை: நாடு கடத்தல்

ஆகஸ்ட் 03, 2007

துபாய்: விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களுக்கு துபாய் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனை முடிந்ததும் அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

ஒய்.எச், இசட்.எச், என்.டி என அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. முழு விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஜனவரி 14ம் தேதி மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒய்.எச். என்ற பெண், மற்ற இருவரையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். அல் ரபா போலீஸார் மூன்று பேரையும் கைது செய்து துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை 6 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி அகமது ஹசன் அல் முட்டவா, சிறைத் தண்டனைக்குப் பின்னர் அவர்களை நாடு கடத்த உத்தரவிட்டார். தண்டனைக்குள்ளான மூன்று பேரும் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்னொரு வழக்கில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏ.இ. என்பவரும், அதே நாட்டைச் சேர்ந்த எச்.ஏ என்பவரும் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஏ.இயை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அவரது நண்பருக்கு 1,000 தினார்கள் அபராதம் விதித்து நாட்டை விட்டு வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இருவரும் கடந்த மார்ச் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர். துபாய் விமான நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட வேலியம் பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எச்.ஏ வைத்திருந்த பையில் இந்த வேலியம் பொட்டலங்கள் இருந்தன. ஆனால் அவர் வேலியம் பொட்டலங்களை வைத்திருந்தது தனக்குத் தெரியாது என்று ஏ.இ. கூறியதை நீதிபதி ஏற்றுக் கொண்டு அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

எச்.ஏ ஒரு பெண் ஆவார். விடுமுறைக்காக ஏ.இ. பிலிப்பைன்ஸ் சென்றபோது தனது கொடுக்கும் பையை வாங்கி வருமாறு அவர் ஏ.இ.யிடம் கூறியிருந்தார்.

மேலும் இந்த வேலியத்தை மருந்தாகத்தான் தான் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கோர்ட்டில் தெரிவித்தார். இதுதொடர்பான மருத்துவரின் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்தார்.

http://thatstamil.oneindia.in/news/2007/08/03/dubai.html

Wednesday, August 1, 2007

கீழே விழுந்து இறந்த இந்தியருக்கு நஷ்ட ஈடு - துபாய் கோர்ட் உத்தரவு

கீழே விழுந்து இறந்த இந்தியருக்கு நஷ்ட ஈடு - துபாய் கோர்ட் உத்தரவு

ஜூலை 27, 2007

துபாய்: விளம்பர நிறுவனத்தின் விளம்ப போர்டை மாட்டிக் கொண்டிருந்தபோது தவறுதலாக கீழே விழுந்து இறந்த இந்தியத் தொழிலாளருக்கு நஷ்ட ஈடு வழங்க அந்த நிறுவனத்திற்கு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் ஷேசய்யா பிராங்க்ளின் (32). இவர் கடந்த 2002ம் ஆண்டு, ஜடாஃபா என்ற இடத்தில், விளம்பர நிறுவனத்தின் போர்டு ஒன்றை மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறுதலாக கீழே விழுந்து இறந்தார்.

அவரது குடும்பத்திற்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 544 தினார் நஷ்ட ஈடு வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றம் விளம்பர நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து அந்த விளம்பர நிறுவனம் அப்பீல் செய்தது.

இதை விசாரித்த துபாய் மேல் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, நஷ்ட ஈட்டுத் தொகையை சேஷய்யா குடும்பத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/07/27/dubai.html

வளைகுடா: இந்திய பணிப்பெண்களுக்கு உதவ தூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைன்!

வளைகுடா: இந்திய பணிப்பெண்களுக்கு உதவ தூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைன்!

ஜூலை 26, 2007

துபாய்: வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை பார்த்து வரும் இந்தியப் பெண்களுக்கு உதவ இந்தியத் தூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்படவுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏராளமான பெண்கள் வீட்டு வேலை பார்த்து வருகின்றனர். வேலை பார்க்கும் இடங்களில் இவர்கள் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக பாலியல் ரீதியிலான சித்திரவதைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந் நிலையில் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் இந்தியப் பணிப்பெண்களுக்கு உதவ, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் 24 மணி நேர ஹெல்ப்லைனை ஏற்படுத்த மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இத்துறையின் செயலாளர் நிர்மல் சிங் கூறுகையில், இந்தப் புதிய வசதி குறித்த விரிவான விவரங்களை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

அனைத்து இந்தியத் தூதரகங்களிலும் 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன என்றார்.

ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை என்று துபாயில் உள்ள இந்திய தூதர் வேணு ராஜாமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே 24 மணி நேர ஹாட்லைன் வசதி உள்ளது. 050-9433111 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை பணிப்பெண்கள் கூற முடியும். எப்போதெல்லாம் எங்களுக்குப் புகார் வருகிறதோ, உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை நாங்கள் தொடர்பு கொண்டு குறைகளைத் தீர்க்க முயற்சிக்கிறோம் என்றார் அவர்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/26/gulf.html

துபாயில் புதிதாக 6 சர்வதேச பள்ளிகள்

துபாயில் புதிதாக 6 சர்வதேச பள்ளிகள்

ஜூலை 29, 2007

துபாய்: துபாயில் ஆறு புதிய சர்வதேச பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு சார்பில் இந்த பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவு மற்றும் மனித வள ஆணையம் இந்தப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளது.

புதிதாக தொடங்கப்படும் பள்ளிகள் மூலம் தரமான கல்வி போதிக்கப்படும். சர்வதேச பள்ளிகள் கவுன்சிலின் தரக் கட்டுப்பாடு அனைத்தும் இந்தப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/29/dubai.html

ஷார்ஜா சாலை விபத்தில் தமிழர் உள்பட 5 இந்தியர்கள் பலி

ஷார்ஜா சாலை விபத்தில் தமிழர் உள்பட 5 இந்தியர்கள் பலி

ஜூலை 31, 2007

ஷார்ஜா: ஷார்ஜாவில் மினி பஸ்ஸும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உள்பட 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

ஒரு கட்டுமானக் கம்பெனியைச் சேர்ந்த மினி பஸ்ஸில், தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து ஷார்ஜாவில் உள்ள சஜா என்ற பகுதிக்கு வேலைக்காக போய்க் கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்து ஷார்ஜா - அல்தாஹித் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, 7வது வளைவில் எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

லாரி டிரைவர் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷார்ஜாவில் உள்ள அல்-குஸாமி மற்றும் குவைத்தி மருத்துவமனையிலும், அஜ்மானில் உள்ள கலீபா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி பஸ்ஸின் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இறந்தவர்கள் விவரம்

1. ரங்கராஜன் பெருமாள் (25), தமிழ்நாடு.
2. தாமஸ் தாமஸ் (51), கும்பநாடு, கேரளா.
3. பிரகாஷ் ராம் (45), பஞ்சாப்.
4. கேசவன் அஜீத் (37), திருவனந்தபுரம்.
5. ஷோபன் மணிகண்டன் (30), திருவனந்தபுரம்.

இவர்களில் அஜீத்தும், ராமும் அந்தக் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தனர். மற்றவர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் சிக்கிய லாரி, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது எதிரே வந்த மினி பஸ்ஸுடன் மோதியது.

இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் இந்தியா, நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப கட்டுமான நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/07/31/sharjah.html

துபாய்-அஸ்கான் சமூக கூடத்தில் மார்க்க சொற்பொழிவு

துபாய்-அஸ்கான் சமூக கூடத்தில் மார்க்க சொற்பொழிவு

ஆகஸ்ட் 01, 2007

துபாய்: துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வாரந்தோறும் இஸ்லாமிய மார்க்க தமிழ் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் வாரந்தோறும் மார்க்க சொற்பொழிவு நடந்து வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமை இரவுகளில் இஷா தொழுகைக்கு பின்னர் நடைபெற்று வருகிறது.

இந்த வாரம் நடைபெறும் சொற்பொழிவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேசர்ந்த ஆலிம் மெளலவி ஏ. சீனி நைனார் முகம்மது தாவூதி சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு 050 4255256 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முகம்மது மரூப் தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/08/01/dubai.html